கோஹ்லியை சார்ந்திருப்பது நியாயம் அல்ல

Published By: Vishnu

17 Aug, 2018 | 11:14 AM
image

இந்­திய அணி விராட் கோஹ்­லியை மட்­டுமே சார்ந்­தி­ருக்­கி­றது என்­பது நியாயமல்ல. திற­மை­யான வீரர்கள் அந்த அணியில் உள்­ளனர் என்று இலங்கை அணியின் கிரிக்கெட் ஜாம்­ப­வான் குமார் சங்­கக்­கார தெரி­வித்­துள்ளார். 

இங்­கி­லாந்து - இந்­திய அணி­க­ளுக்­கி­டை­யி­லான 5 போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடை­பெற்று வரு­கி­றது. இதில் முதலிரு போட்­டி­க­ளிலும் இந்­திய அணி படு­தோல்­வியை சந்­தித்­தது.

இதனால் இந்­தியா முழுக்க முழுக்க விராட் கோஹ்­லியை நம்­பியே இருக்­கி­றது. அவர் தனியொரு இரா­ணு­வ­மாக அணியில் இருக்­கிறார் என்று பேசப்­பட்டு வரு­கி­றது. 

இந்­நி­லையில் இலங்கை அணியின் முன்னாள் அணித் தலை­வரும் துடுப்­பாட்ட ஜாம்­ப­வானாக விளங்­கி­ய­வருமான சங்­கக்­கார, இந்­திய அணி கோஹ்­லியை மட்­டுமே சார்ந்­தி­ருக்­கி­றது என்­பது நியாயமல்ல என்று தெரி­வித்­துள்ளார்.

இது­கு­றித்து சங்­கக்­கார மேலும் கூறு­கையில், கடந்த சில வரு­டங்­க­ளாக விராட் கோஹ்லி துடுப்­பெ­டுத்­தாடி வரு­வதைப் பார்க்­கையில் அவ­ருடன் மற்ற துடுப்­பாட்ட வீரர்­களை ஒப்­பி­டு­வது நியாயம் அல்ல. 

அவ­ரு­டைய ஆட்­டத்தைப் பார்க்கும் போது நம்­ப­மு­டி­யாத வகையில் இருக்கும். சிறந்த திறன் அவ­ரிடம் இருக்­கி­றது. ஆனால், மற்ற வீரர்­களும் சிறந்­த­வர்­களே.

புஜாரா, ரஹானே ஆகியோர் உண்­மை­யி­லேயே சிறந்த துடுப்­பாட்ட வீரர்­கள்தான். புஜாரா டெஸ்டில் 50 க்கும் மேல் சரா­சரி வைத்­துள்ளார். ரஹானே வெளி­நாட்டில் 50 க்கும் மேல் சரா­சரி வைத்­துள்ளார். 

மற்ற வீரர்­களும் சிறப்­பான ஆட்­டத்தை வெளிப்­ப­டுத்தக் கூடியவர்களே. 

முரளி விஜய், ஷிகர் தவான், தினேஷ் கார்த்திக் ஆகியோரும் சளைத்தவர்கள் அல்ல என்று தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59