வவுனியா சுற்றுவட்ட வீதியில் இன்று அதிகாலை மரமொன்று சரிந்து வீழ்ந்ததில் பல மணிநேரமாக இவ் வீதியூடான போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது.

சுற்றுவட்ட வீதியில் நின்ற பழைமை வாய்ந்த மரமோன்று அதிகாலை வீதியில் சரிந்து வீழ்ந்துள்ளது. இதன் காரணமாக சுற்றுவட்ட வீதியுடான போக்குவரத்து பல மணிநேரமாக தடை ஏற்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்ட போதிலும் அவர்கள் இதுவரை கவனம் செலுத்தவில்லையேனவும் இதனால் இவ் வீதியுடாக பணிக்கு செல்லும் உத்தியோகத்தர்கள் வவுனியா நகருக்கு சென்று அதன் ஊடாகவே செல்ல வேண்டியுள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்தனர்.

குறித்த இடத்திற்கு விரைந்த இலங்கை மின்சாரசபையினர் மின்சாரத்தினை துண்டிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.