மட்டக்களப்பு  மாவட்ட அரசாங்க  அதிபர் காரியாலயத்திலுள்ள தலைமை சமுர்த்தி திணைக்கள சமூக பாதுகாப்பு மையத்தில் 57 இலட்சம் ரூபா நிதியை காசோலை மூலம் மோசடி செய்த சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் மற்றும் புல்லுமலை பிரதேசத்தைச் சேர்ந்த 6 பெண்கள் உட்பட 8 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் பணமும் மீட்கப்பட்டுள்ளது. 

குறித்த திணைக்களத்தில் இலங்கை வங்­கியில் வைப்பில் இருந்த சமூக பாதுகாப்­புக்­கான நிதியில் மோசடி இடம்­பெற்­றுள்­ள­தாக அங்கு கட­மை­யாற்றும் சமுர்த்தி   உத்­தி­யோ­கத்தர் சிவ­லிங்கம் குக­பரன்  மட்டு. பொலிஸ் நிலை­யத்தில் திங்­கட்­கி­ழமை  முறைப்­பாடு  செய்­துள்ளார்.

இத­னை­ய­டுத்து மட்டு. தலை­மை­யக பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் எம்.எம்.டி.கீதா­வத்த, உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் சந்­தி­ர­பால  ஆகி­யோரின்  வழி­காட்­ட­லில்  பெரும் குற்­றத் ­த­டுப்பு பிரிவு பொறுப்­ப­தி­காரி ஏ.எம்.என். பண்­டார சார்ஜண்ட்  கே.சி.எம். முஸ்­தப்பா தலை­மை­யி­லான பொலிஸ் குழு­வினர் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டனர். 

இதன்­போது அர­சாங்க அதிபர் காரி­யா­ல­யத்­தி­லுள்ள தலைமை சமுர்த்தி திணைக்­க­ளத்தின் நிதி ­பி­ரிவில் கட­மை­யாற்றும்  சமுர்த்தி உத்­தி­யோ­கத்தர் ஒருவர் கரு­வேப்­பங்­கே­ணியை சேர்ந்த  இளைஞர் ஒரு­வ­ருடன் சேர்ந்து இலங்கை வங்­கியில் சமூ­க­பா­து­காப்­புக்­காக வைப்­பி­லி­டப்­பட்­டுள்ள நிதியில் காசோலை மூல­மாக 57 இலட்சம் ரூபாவை  மோச­டி­யாக மாற்றி  அதனை புல்­லு­மலை பிர­தே­சத்­தி­லுள்ள 6 பெண்­களின்  மக்கள் வங்கி கணக்கில் வைப்­பி­லிட்­டுள்ளார்.

இதனை தொடர்ந்து அந்த பெண்­களை கொண்டு வங்­கியில் இருந்து 37 இலட்சம் ரூபாவை எடுத்­துள்­ள­துடன்  மிகுதி 21 இலட்சம் ரூபா மாற்­றப்­ப­டாமல் இருந்­துள்­ளது  என பொலி­ஸாரின் விசா­ர­ணை­களில் தெரி­ய­ வந்­துள்­ளது.

 இதில்  பிர­தான  சந்­தேகநப­ரான சமுர்த்தி உத்­தி­யோ­கத்தர் மற்றும் அவ­ருக்கு உடந்­தை­யாக இருந்த இளைஞர் மற்றும் 6 பெண்கள் உட்பட 8 பேரை கைது செய்துள்ளதுடன்  மோசடி செய்யப்பட்ட பணமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.