(எம்.சி.நஜிமுதீன்)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 39 ஆவது அமர்வில் இலங்கையில் மக்களின் வாக்களிக்கும் உரிமை மீறப்படும் விவகாரம் தொடர்பில் முறையிடவுள்ளதாக உலகளாவிய தேசப்பற்றுள்ள இலங்கையர் ஒன்றியத்தின் உறுப்பினர் துஷாந்தி ஹபுகொட தெரிவித்துள்ளது.

பொரளை என்.எம்.பெரேரா நிலையத்தில் உலகளாவிய தேசப்பற்றுள்ள இலங்கையர் ஒன்றியம் ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கையில் தற்போது ஜனநாயகம் பேணப்படுகின்றதா என்கின்ற சந்தேகம் எமக்குள்ளது. ஏனெனில் மூன்று மாகாண சபைகளின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ளது. எனினும் இன்னும் தேர்தல் நடத்தப்படவில்லை. ஆகவே மக்களின் வாக்களிக்கும் உரிமையை நல்லாட்சி அரசாங்கம் இல்லாது செய்துள்ளது. 

எனவே எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 19 ஆம் திகதி நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவையில் 39 ஆவது அமர்வில் இலங்கையில் தற்போது மீறப்படும் உரிமைகள் குறித்த வரைபுகளை முன்வைக்கவுள்ளோம் என்றார்.