தாய்வான் நாட்டின் தலைநகரான தாய்ப்பேயில் பாரிய லில்லி இலையின் நடுவில் அமர்ந்து,  அந் நாட்டு மக்கள் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு மகிழ்கின்றனர்.

தாய்ப்பேய் நகர பூங்கா மற்றும் தெருவிளக்குகள் அலுவலகத்தினால் அரிய தாவர வகைகள் பற்றி மக்களுக்கு பயிற்றுவிக்கும் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வேலைத்திட்டம் வருடாந்தம் ஆகஸ்ட் மாதம் இடம் பெற்று வருகிறது.

இவ் வேலைத்திட்டத்திற்கு வருகை தந்த மக்கள் தாவர இலைகளிலேயே மிகப் பெரிய இலையென கருதப்படும் விக்டோரியா வகை லில்லி இலையின் மேல் அமர்ந்து புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.

இவ்வாறு புகைப்படம் எடுத்துக் கொள்வதில் பெண்களும் குழந்தைகளுமே ஆர்வம் காட்டி வருகின்றனர்.

லில்லி இலைக்கு சேதம் ஏற்படாதவாறு இலையின் மீது பிளாஸ்டிக் ஆசனம் ஒன்று போடப்பட்ட ஒவ்வொருவருக்கும் ஒரு நிமிட நேரம் அமர அனுமதி வழங்கப்படுகிறது.

மேலும் குறித்த இலை 65 கிலோ கிராம் எடையை தாங்கக் கூடியது என தாய்ப்பேய் நகர பூங்கா மற்றும் தெருவிளக்குகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த விக்டோரியா இன லில்லித் தாவரமானது அதன் தாயகமான அமெரிக்காவின் கரையோரங்களிலிருந்து தாய்வானிற்கு கொண்டவரப்பட்டு தாய்வானின் பல பகுதிகளில் வளர்க்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.