பாகிஸ்தானில் தேசத்திற்கு எதிராக மத ரீதியான பேஸ்புக் பதிவு செய்ததாக இளைஞர் ஒருவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

ஷியா பிரிவு முஸ்லீம் மீது நம்பிக்கை கொண்ட ரிஸ்வான் ஹார்டெர் என்ற இளைஞர் குறுங்குழு வாதத்தை ஆதரிக்கும் வகையில் செயல்பட்டது, நபிகள் நாயகம் குறித்து படம் வரைந்தது உள்ளிட்ட 3 குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன.

குறித்த இளைஞருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனையும் 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுவதாக பாகிஸ்தான் சிறப்பு சிறை நீதிமன்றம் தனது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளது.