யாழ்.போதனா வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள அரச மருந்தாக்கல் கூட்டுத் தாபனத்தின் புதிய விற்பனை கிளையினை இன்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன திறந்து வைத்தார்.

யாழ்ப்பாணத்துக்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன யாழ்.போதனா வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள அரச மருந்தாக்கல் கூட்டுத் தாபனத்தின் புதிய விற்பனை கிளையினை திறந்து வைத்ததுடன் அங்கு இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளிலும் பங்குபற்றினார்.

இதைத் தொடர்ந்து புனர்வாழ்வு நிலையத்துக்கான புதிய கட்டடத்துக்கான கட்டட வேலைகளை ஆரம்பித்து வைத்து, வைத்தியசாலையில் நோயாளர் விடுதி போன்றவற்றை பார்வையிட்டதுடன் தாதியர் விடுதியினையும் திறந்து வைத்து அங்கு இடம்பெற்ற நிகழ்விலும் கலந்துகொண்டார்.

இந் நிகழ்வில் பிரதி சுகாதரத்துறை அமைச்சர், வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி, பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன், மாவைசேனாதிராசா, மாகாணசபை உறுப்பினர் சயந்தன், சிவாஜிலிங்கம் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தை குறிப்பிடத்தக்கது.