வடக்கில் வெவ்வேறு பகுதிகளிலிருந்து ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டாலும் மீண்டும் யுத்தம் ஏற்படுவதற்கு இடமளிக்கப்போவதில்லை என வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

பெரிய மழை பெய்து முடிந்தவுடன் நிலத்தில் ஈரம் இருப்பது போன்று வட மாகாணத்தில் இடம்பெற்ற முப்பதாண்டு யுத்தத்தின் பின்னர் ஓரிரு ஆயுதங்கள் கண்டெடுக்கப்படலாம். அது யுத்தத்தின் மறு ஆரம்பமல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.