(நா. தனுஜா)

மூன்று தசாப்தகால யுத்தத்தின் போது வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்ற இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்குத் திரும்புமாறு தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் பிரதியமைச்சர் அலிசாஹிர் மெளலான அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழகத்தின், திருச்சி ஜமால் மெஹமட் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்ட அழைப்பினை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

யுத்தத்தின் போது புலம்பெயர்ந்து சென்றவர்களில் மீண்டும் நாட்டுக்குத் திரும்ப விரும்புபவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. 

குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழர்கள் கருத்திற் கொள்ளப்பட்டுள்ளதுடன் இராணுவ நடவடிக்கைகளைக் குறைத்து நாட்டில் இராணுவமயமாக்கலை கட்டுப்படுத்துவதற்கான செயற்பாடுகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளது என்றார்.