பாகிஸ்தானின் பாராளுமன்றத்தில் கடந்த திங்கட்கிழமையன்று பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற இம்ரான்கான் தான் புகைப்படம் எடுக்கும்போது கோட்டை கடன் வாங்கி அணித்திருக்கிறார்.
இந்த நிகழ்வு தற்போது அந்நாட்டு சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
கடந்த திங்கட்கிழமையன்று நாடாளுமன்றத்தில் இம்ரான்கான் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார். அப்போது உறுப்பினர் பதவியேற்பு ஆவணத்தில் கையெழுத்திட்டு நாடாளுமன்றத்துக்கான அடையாள அட்டை பெறுவதற்காக புகைப்படம் எடுப்பது வழக்கம்.
அவ்வாறு புகைப்படம் எடுக்கும்போதும் இம்ரான்கான் கோட் அணியவில்லை, வெள்ளை நிற ஜிப்பா மட்டும் அணிந்திருந்தார். பின்னர் அங்கிருந்த நாடாளுமன்ற ஊழியரது கோட்டை அணிந்து கொண்டு அடையாள புகைப்படத்துக்கு இம்ரான் கான் போஸ் கொடுத்தார்