ஜனா­தி­பதி, பிர­த­மரின் பெயர்­களை பயன்­ப­டுத்தி வெளி­நாட்டு வேலை­வாய்ப்­புக்­களை பெற்­றுத்­த­ரு­வ­தாக தெரி­வித்து நிதி மோசடி செய்யும் நபர்­க­ளுக்கு எந்­த­வித மன்­னிப்பும் இல்லை. அவர்­க­ளுக்கு எதி­ராக கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­படுமென வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பிரதி அமைச்சர் மனுஷ நாண­யக்­கார தெரி­வித்தார்.

பிர­தமர் அலு­வ­ல­கத்தில் பணி­பு­ரி­வ­தா­கவும் சிரேஷ்ட அமைச்சர் ஒரு­வ­ருக்கு மிகவும் நெருக்­க­மா­னவர் எனவும்  தெரி­வித்து, வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பெற்­றுத்­த­ரு­வ­தாக வாக்­கு­றுதியளித்து நிதி மோசடி புரிந்த நபர் ஒருவர் இலங்கை வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­ய­கத்தின் அதி­கா­ரி­க­ளினால் கடந்­த­வாரம் அம்­பாறை உகன பிர­தே­சத்தில் கைது­செய்­யப்­பட்­டி­ருந்தார். இது தொடர்­பாக ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே பிர­­திய­மைச்சர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்து கூறு­கையில்,

வெளி­நாட்டு வேலை­வாய்ப்­புக்­களை பெற்­றுத்­த­ரு­வ­தாக தெரி­வித்து பணம் அற­விடும் சம்­ப­வங்கள் இடம்­பெ­று­வ­தாக தகவல் கிடைத்­து­வ­ரு­கின்­றது. பிர­த­மரின் செய­லாளர் என தன்னை அறி­மு­கப்­ப­டுத்­திக்­கொண்டு ஜேர்­மனில் தொழில் பெற்­றுத்­த­ரு­வ­தாக தெரி­வித்து பணம் அற­விட்­டுக்­கொண்டிருக்கும் நிலையில் அண்­மையில் நபர் ஒருவர் கைது­செய்­யப்­பட்டார். அதனால் நாட்டு பிர­ஜைகள் யாராக இருந்­தாலும் வெளி­நாட்டு தொழி­லுக்கு செல்­வ­தாக இருந்தால் அதற்­கு­ரிய முறையில் செல்­ல­வேண்டும். அதற்­காக அவர்கள் வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­ய­கத்தில் தங்­களை பதி­வு­செய்­து­கொள்­ள­ வேண்டும்.

ஜனா­தி­பதி, பிர­தமர் விட­யத்­துக்கு பொறுப்­பான அமைச்சர் ஹரீன் பெர்­ணாந்து மற்றும் பிரதி அமைச்­ச­ராக இருக்கும் எனது பெய­ரையோ அல்­லது வேறு அமைச்­சர்­களின் பெயர்­க­ளையோ  பாவித்து வெளி­நாட்டு வேலை­வாய்ப்பை  பெற்­றுத்­த­ரு­வ­தாக தெரிவித்து யாரா­வது  பணம் அற­விடும் நட­வ­டிக்­கையை மேற்­கொள்­வ­தாக இருந்தால் அது மோசடி நட­வ­டிக்­கை­யாகும். இவ்­வா­றா­ன­வர்­க­ளுக்கு எதி­ராக கடும் சட்ட நட­வ­டிக்கை எடுக்­க­வுள்ளோம்.

வெளி­நாட்டுவேலை­வாய்ப்­புக்­காக செல்­ப­வர்கள், யாருக்கும் பணம் கொடுக்­கத்­தே­வை­யில்லை. அத்­துடன் ஜப்பான், இஸ்ரேல் அல்­லது கொரியா ஆகிய   நாடு­களில் தொழில் வழங்­கும்­போது பணம் அற­விட எவ­ருக்கும் அனு­மதி வழங்­கி­ய­தில்லை. அவ்­வாறு பணம் அற­வி­டு­வ­தாக இருந்தால் வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­ய­கத்­தினால் அனு­ம­திக்­கப்­பட்ட பணம் மாத்­தி­ரமே அற­வி­டப்­படும். அதனை பணி­ய­கத்தின் இணை­யத்­த­ளத்­தி­னூ­டாக அறிந்துகொள்ளலாம்.

அதனால் மக்களின் அறியாமையை பயன்படுத்தி யாராவது ஜனாதிபதி, பிரதம ரின் பெயர்களை பிரயோகித்து பண மோச

டிகளில் ஈடுபடுவது தொடர்பாக அறிந் தால் அதுதொடர்பில் எங்களுக்கு அறியத்தரவும். அது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுப்பதற்கு நாங்கள் பின்வாங்க மாட்டோம் என்றார்.