மஹிந்த அணி­யினர் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யி­லி­ருந்து விலகி  சுயா­தீ­ன­மாக பாரா­ளு­மன்­றத்தில் செயற்­பட்டால்   அவர்கள் எதிர்க்­கட்சித்  தலைவர் பத­வியை கோர முடியும். ஆனால் அவர்கள் அவ்வாறு மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யி­லி­ருந்து வில­கினால் பாரா­ளு­மன்ற உறுப்­பு­ரி­மையை இழந்­து­வி­டு­வார்கள் என்று அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரட்ன   தெரி­வித்தார். 

அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற  வாராந்த  அமைச்­ச ­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து வெளியி­டு­கை­யி­லேயே அவர்  மேற்­கண்­ட­வாறு கூறினார். 

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், 

மஹிந்த அணி­யி­ன­ருக்கு எதிர்க்­கட்சி தலைவர் பதவி வேண்­டு­மானால் அவர்கள்  ஐக்­கிய மக்கள் சுதந்­திர  முன்­ன­ணி­யி­லி­ருந்து வில­க­வேண்டும்.  அவ்­வாறு வில­கினால்  அந்த முன்­ன­ணியின் செயலர்    அதனை  சபா­நா­ய­க­ருக்கு அறி­விப்பார். 

ஆனால் அங்கு ஒரு சிக்கல் உள்­ளது. அதா­வது  ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யி­லி­ருந்து மஹிந்த அணி­யினர்  விலகி  சுயா­தீ­ன­மாக பாரா­ளு­மன்­றத்தில் செயற்­பட்டால் அவர்கள் எதிர்க்­கட்சித்  தலைவர் பத­வியை கோர முடியும். 

எனினும்  அவர் கள் அவ்­வாறு ஐக்கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யி­லி­ருந்து வில­கினால் பாரா­ளு­மன்ற உறுப்­பு­ரி­மையை இழந்­து­வி­டு­வார்கள். அப்போது நாட்டில் புதிய அரசியல் நிலைமை உருவாகும் என்றார்.