நேவிசம்பத் தலைமறைவாவதற்கு பணம் வழங்கினார் முன்னாள் கடற்படை தளபதி- சிஐடி தகவல்

Published By: Rajeeban

15 Aug, 2018 | 09:49 PM
image

கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரியான நேவி சம்பத் தலைமறைவாகயிருப்பதற்கு முன்னாள் கடற்படை தளபதியும் முப்படைகளின் பிரதானியுமான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ண பணம் வழங்கினார் என குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று கைதுசெய்யப்பட்ட நேவி சம்பத் இன்று நீதிமன்றத்தில ஆஜர் செய்யப்பட்டவேளை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இதனை தெரிவித்துள்ளனர்.

முப்படைகளின் பிரதானி கடற்படை தளபதியாகயிருந்தவேளை நேவி சம்பத் தப்பிச்செல்வதற்கு உதவினார் என்பதற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளன என குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து கடந்த வருடம் பொலிஸாரிடமிருந்து தப்புவதற்காக நேவிசம்பத்திற்கு 500,000 ரூபாய் கடற்படையின் வங்கிக்கணக்கிலிருந்து வழங்கப்பட்டது தொடர்பிலான விபரங்களை சமர்ப்பிக்குமாறு இலங்கை  வங்கிக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த வருடம் மார்ச்மாதத்திற்கும் மே மாதத்திற்கும் இடையில் இடம்பெற்ற வங்கிபரிவர்த்தனைகள் தொடர்பான விபரங்களை பகிரங்கப்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் சந்தேகநபரை தொடர்ந்து விசாரணை செய்யுமாறும் உத்தரவிட்டுள்ள நீதவான் சந்தேகநபர் வெளிநாடு தப்பிச்செல்வதற்கு உதவிய நபர்கள் குறித்த விசாரணைகளைமேற்கொள்ளுமாறும் உத்தரவிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51