கிளிநொச்சி, 155 ஆம் கட்டை பகுதியில் இராணுவத்தின் ரக் ரக வாகனமொன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளின் சாரதி உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இந்த விபத்தில் உயிரிழந்தவர் 51 வயதையுடைய கிளிநொச்சி, பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்தவராவார்.

கிளிநொச்சியிலிருந்து இரணைமடு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது, அதே திசையில் சென்ற இராணுவத்தினரின் ரக் ரக வாகனத்துடன் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.