(க.கிஷாந்தன்)

நானுஓயா எடின்புரோ தோட்ட தாஜ்மஹால் விளையாட்டுக் கழகம் நடாத்தும் அணிக்கு 6 பேர் கொண்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி சர்வதேச கிரிக்கெட் விதிமுறைகளுக்கமைய இம்மாதம் 5 ஆம்,  6 ஆம் திகதிகளில் நானுஓயா தமிழ் மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் அனைத்து பகுதிகளிலும் உள்ள விளையாட்டு கழகங்கள் கலந்து கொள்ள முடியும் என ஏற்பாட்டுக் குழு தெரிவிக்கின்றது.

போட்டியில் முதலாம் இடத்தைபெறும் அணிக்கு 25000 ரூபா பணப்பரிசும் வெற்றிக்கிண்ணமும் வழங்கப்படும். 

இரண்டாம் இடத்தை பெறும் அணிக்கு 15000 ரூபா பணமும் வெற்றிக்கிண்ணமும் மூன்றாம் இடத்தை பெறும் அணிக்கு 5000 ரூபா பணமும் கிண்ணமும் வழங்கப்படும்.

அத்தோடு அனைத்து போட்டிகளிலும் சிறந்த வீரர்கள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கான பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.

அனைத்து கழகங்களும் பந்து மற்றும் துடுப்புமட்டை கொண்டு வருவது அவசியமாகும். போட்டி தொடர்பாக தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு 071 3232898 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.