(இரோஷா வேலு) 

பெண்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி அவர்களிடமிருந்து பணம் மற்றும் நகைகள் என்பவற்றை கொள்ளையடித்து வந்த நபர் ஒருவரை மீரியாண விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 37 வயதுடைய பமண லுனுகம பூகொட பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

குறித்த சந்தேக நபர் இணைய வழி மற்றும் பத்திரிகைகளில் காணப்படும் விளம்பரங்களை அடிப்படையாக கொண்டு பெண்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி அவர்களிடமிருந்து பணம் மற்றும் நகைகள் என்பவற்றை கொள்ளையடித்து வந்துள்ளார்.

இந் நிலையில் இவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் பொலிஸ் நிலையங்களில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைவாகவே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் இவரிடமிருந்து பெண்களை ஏமாற்றி பெறப்பட்டதாக கூறப்படும் மடிக் கணணியொன்றும், கார் ஒன்றும் ஒரு இலட்சத்து 23 ஆயிரம் ரூபா பணத்தையும் மீட்டுள்ள பூகொடை பகுதியில் வைத்து விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார், இவரை இன்று நுகேகொட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது நீதிவான் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.