ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளமையினால் பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதுடன் மாற்று பாதையை  பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுக்கின்றனர்

மலையகத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டவலை நகரை அன்மித்த பகுதியிலே இன்று மாலை 3.30 மணியளவில்  மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர் 

மண்சரிவு  காரணமாக ஹட்டன் கொழும்பு, ஹட்டன் கண்டி .நாலவப்பிட்டி .கினிகத்தேன பகுதிகளுக்கான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ள நிலையில் 

ஹட்டன் பகுதிக்கு வருகைத்தருவோர் தியகல வழியாக நோட்டன் பிரிட்ஜ் பாதையையும். கலுகல. லக்ஹபான நோட்டன் பிரிட்ஜ் வழியையும் பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுக்கின்றனர்