"தமிழ் மக்களுக்கு எதிர்க்கட்சி  தலைமை பதவி தேவையில்லை"

Published By: Digital Desk 7

15 Aug, 2018 | 04:24 PM
image

(எம்.சி.நஜிமுதீன்)

தமிழ் மக்கள் எதிர்க்கட்சித் தலைமைப் பதவி கோரவில்லை. அம்மக்கள் தமது பிரச்சினைகளைத் தீர்த்து வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புமாறே வேண்டுகின்றனர். எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்களின் விடயத்தில் கவனம் செலுத்தாது புலம்பெயர் தமிழ் அமைப்புளின் தேவைகளுக்கு இணங்க செயற்படுவதாக கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பொரளை என்.எம். பெரேரா நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் தமிழ் மொழியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

"சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தற்போது தேர்தல்கள் தொடர்பில் தீர்மானிப்பதில்லை. மாறாக சபை முதல்வரே அதனைத் தீர்மானிக்கும்  நிலை ஏற்பட்டுள்ளது.  ஏனெனில்  சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல ஜனாதிபதித் தேர்தல் முதலில் நடைபெறலாம் எனக் குறிப்பிட்டுள்ளார். எந்த தேர்தல் என்றாலும் பறவாயில்லை தேர்தலை நடத்துமாறே நாம் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் ஜனாதிபதியும் பிதமரும் மாறுபட்ட கருத்துகளைத் தெரிவிக்கின்றனர். அமைச்சரவையில் தீர்மானம் எடுத்துவிட்டு பின்னர் பொதுமக்கள் மத்தியில் அதற்கு மாற்றமான கருத்துகளைத் தெரிவிக்கின்றனர். இது குறித்து மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர். 

மேலும் கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்றில் சுயாதீனமாகச் செயற்படுவது தொடர்பில் தீர்மானிப்பதற்கு நிபுனர் குழு ஒன்றை நியமித்துள்ளது. அக் குழுவில் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் மாத்திரமின்றி சட்டத்துறை வல்லுனர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அக்குழு இரு வாரங்களுக்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளது. 

மேலும் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் வடக்கு,கிழக்கு மக்களின் தேவைகளில் கவனம் செலுத்துவதில்லை. அம்மக்களுக்கு வீட்டுப்பிரச்சினை, கல்வி, சுகாதாரம், தொழிலின்மை உட்பட இன்னோரன்ன பிரச்சினைகள் உள்ளன. அவை பற்றி உத்தியோகபூர்வ எதிர்க்கட்சி குரல் கொடுப்பதாக இல்லை. 

எனினும் புலம்பெயர் அமைப்புகளின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு அவர்கள் அனைவரும் முனைப்புக் காட்டுகின்றனர். ஆனால் நாட்டிலுள்ள தமிழ் மக்களின் விடயத்தில் கவனம் செலுத்துவதற்கு பின் நிற்கின்றனர். 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்தை நிறைவுசெய்த பின்னர் வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தார்.

அவ்வாறான வேலைத்திட்டங்கள் அனைத்தும் தற்போது தடைப்பட்டுள்ளது. எனவே தமிழ் மக்களுக்கு தற்போது எதிர்க்கட்சித் தலைமை தேவையில்லை. அம்மக்களின் வாழ்வாதாரத்தை அபிவிருத்திசெய்யும் வேலைத்திட்டங்களே வேண்டும்.

மேலும் எதிர்க்கட்சித் தலைவரின் ஆலோசகராக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உள்ளார். எனினும் அவர் கொழும்பில் வாழ்கிறார். எனவே அவரால் தமிழ் மக்களுக்கு என்ன செய்ய முடியும்?

நாட்டிலுள்ள எந்த ஒரு தரப்பினருக்கும் பாகுபாடு காண்பிக்கக்கூடாது. அனைவரும் ஒரேவிதமாக நோக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்தால்தான் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும்." எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19