இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், கங்குலி, வி.வி.எஸ் லஷ்மண் ஆகியோரை கிரிக்கெட் ஆலோசனைக் குழுவிலிருந்து நீக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பிசிசிஐயின் ஆலோசனைக் குழுவில், சச்சின், கங்குலி, லஷ்மண் அங்கம் வகிக்கின்றனர்.

இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிக்கு சிறப்பான பயிற்சியாளர்களை பரிந்துரை செய்வதுதான் இந்தக் குழுவின் பணியாகும். 

இவர்கள் பரிந்துரை செய்யும் ஒருவரை பிசிசிஐ பயிற்சியாளராக நியமிக்கும் ஆனால். அவர்களது பணிக்கு ஊதியமாக அவர்கள் பெறுவதில்லை.

இந்நிலையில் இந்த குழுவிற்கு சம்பளம் வழங்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

ஒருவேளை மூவருக்கும் ஊதியம் வழங்கப்பட நிலை ஏற்பட்டால், பிசிசிஐ யின் இரட்டைப் பதவி ஆதாயத்தில் இவர்கள் சிக்குவார்கள்.

கங்குலி மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத் தலைவராக உள்ளார். அதேபோல லஷ்மண் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆலோசகராக உள்ளார். கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் விளையாடுகிறார்.

இந்நிலையில் ஏதாவது ஒரு பதவியை இவர்கள் இழக்க வேண்டும். ஒருவேளை இது அமுல்படுத்தப்பட்டால் மூன்று பேரும் ஆலோசனைக் குழுவில் இருப்பார்களா என்பது சந்தேகமே.

இதனால் இவர்கள் மூவரும் தங்களது பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.