(இராஜதுரை ஹஷான்)

அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதாக குறிப்பிட்டு நாட்டில் அநாவசிய போலி பிரச்சாரங்களை பொது எதிரணியினர் மேற்கொள்வது எமக்கு எவ்விதமான பாதிப்பினையும் ஏற்படுத்தாது என பிரதியமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் தலைவருக்கு அரசியலமைப்பின் குறிப்பிட்டுள்ள விடயங்களையும் பாராளுமன்ற சம்பிரதாயங்களையும் அடிப்படையாக கொண்டே எதிர்க்கட்சி தலவைர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 

இவ் விடயம் அறியாமல் அரசாங்கத்தை கவிழ்க்க பொது எதிரணியினர் எதிர்க்கட்சி தலைவர் பதவியை கோரி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளனர். எனினும் இவர்கள் இவ்வாறு சுயாதீனமாக செயற்படுவது எமக்கு எவ்விதமான சவால்களையும் ஏற்படுத்தாது என்றார்.