(இரோஷா வேலு) 

தெஹிவளை பகுதியில்  ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.இவ்வாறு கைதுசெய்யப்பட்டவரை கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய வேளையில் நீதவான் எதிர்வரும் 29 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். 

தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெரன்ஸ் மாவத்தை பகுதியில் பொலிஸாரால்  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த நபர்   8 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஸ்ரீ தர்மராம வீதி, ரத்மலானையைச் சேர்ந்த 25 வயதுடைய ருகுணு ஹேவகே தாரக என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.