தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ரி20 போட்டியின் இறுதி தருணங்களில்  நான் கலக்கமடைந்தேன் என இலங்கை அணியின் தலைவர் மத்தியுஸ் தெரிவித்துள்ளார்.

போட்டியின் இறுதி ஓவர்களில் நான் அச்சமடைந்தேன் இலக்கை எட்டுவது கடினமாக விளங்கியதற்கு நாங்களே காரணம் என மத்தியுஸ் தெரிவித்துள்ளார்.

இதற்காக  எங்களையே குறைசொல்லவேண்டும்  நாங்கள் தொடர்ந்தும் விக்கெட்களை இழந்துகொண்டிருந்ததால் இலக்கு கடினமாகியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

துடுப்பாட்டம் பந்துவீச்சு களத்தடுப்பு என மூன்று விடயங்களிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது இந்த உத்வேகத்தை ஆசிய கிண்ணப்போட்டிகளிற்கு கொண்டு செல்ல முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நான் இரசிகர்களிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன் ஒரு நாள் போட்டிகளில் நாங்கள் அவர்களை ஏமாற்றினோம் ஆனால் அவர்கள் எங்களை ஆதரித்தார்கள் இன்று நாங்கள் அவர்களிற்கு வெற்றியை வழங்கியுள்ளோம் எனவும் மத்தியுஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தென்னாபிரிக்கா முப்பது நாற்பது ஓட்டங்களை அதிகமாக பெற்றிருந்தால் போட்டியின் முடிவு மாறியிருக்கும் என அணித்தலைவர் ஜேபி டுமினி தெரிவித்துள்ளார்.

எங்களுடைய வேகப்பந்து வீச்சாளர்கள் எங்களிற்கு சிறப்பான ஆரம்பத்தை கொடுத்தனர் எனினும் நாங்கள் முப்பது நாற்பது ஓட்டங்கள் குறைவாக பெற்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தொடர் மூலம் தென்னாபிரிக்காவிற்கு பல சாதகமான விடயங்கள் கிடைத்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.