(இரோஷா வேலு) 

மினுவாங்கொடை பகுதியில் வீடாென்றிலிருந்து மூன்று பிள்ளைகளின் தந்தையொருவரை வெட்டி கொலை செய்துள்ளதாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

தபால்வத்த வீதி, யாகொடமுல்ல, கொடுகொட பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய தினயாதுர நாலக்க சம்பத் சில்வா என்பவரே கொலைச் செய்யப்பட்டுள்ளார். 

கணவன் மனைவிக்கிடையில் கடந்த 13ஆம் திகதி ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து மூன்று பிள்ளைகளுடன் மனைவி வீட்டை விட்டு வெளியேறி தனது தந்தையின் வீட்டில் தஞ்சம் புகுந்துள்ளார். 

இச் சம்பவத்தின் பின்னரே கடந்த 14ஆம் திகதி காலை 5 முதல் 10.30 மணிக்கிடையில் குறித்த நபரை கொலை செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கொலைச் செய்யப்பட்டவரின் சடலமானது மரண பரிசோதனைகளுக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

மேலும் இக் கொலைச் சம்பவத்துக்கும் மரணித்தவரின் மனைவியின் தந்தைக்கும் தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில் குறித்த சந்தேக நபர் அப்பிரதேசத்தை விட்டு தலை மறைவாகியுள்ளார். 

இச் சம்பவத்தையடுத்து குறித்த நபரை தேடும் பணிகளில் மினுவாங்கொடை பொலிஸார் ஈடுபட்டுள்ளதுடன் நேற்று வைத்தியசாலையில் மரண பரிசோதனைகளை முன்னெடுக்க மினுவாங்கொடை நீதவான் நீதிமன்ற மருத்துவ அதிகாரி வருகை தந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.