பிரித்தானியாவில் பெண் நோயாளிகளை அவர்களுக்கு தெரியாமல் 19000 காணொளிகள் எடுத்த வைத்தியரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்தவர் தாயிர் அல்டாய் (55) வைத்தியரான இவர் தன்னிடம் வரும் பெண் நோயாளிகளை அவர்களுக்கு தெரியாமல் செல்போனில் காணொளி எடுத்துள்ளார். இதில் பலரை ஆடைகள் இல்லாமல் நிர்வாணமாக படம் எடுத்துள்ளார்.

ஒரு பெண்ணை அவர் காணொளி எடுக்கும் போது கண்விழித்துக் கொண்டதால் உண்மை வெளிச்சித்திற்கு வந்தது.

இது குறித்து பொலிசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் பொலிசார் அவ்வைத்தியரை  கைது செய்தனர்.

பின்னர்தான், பெண் நோயாளிகளை பாலியல் ரீதியாக அவர் துன்புறுத்தியது மட்டுமல்லாது, அவ்வைத்தியரின், மூத்த மகளும் தந்தையின் செயலால் பாதிப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.