கட்டான வெலிகட சந்தியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டர் சைக்கிளில் வந்த இருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 41 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.