ஈக்வடார் நாட்டின் தலைநகரான குவைட்டோ தேசிய நெடுஞ்சாலையில் அதி வேகமாக பயணித்த பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் 24 பேர் பலியானதோடு மேலும் 19 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

விபத்து குறித்து ஈக்வடார் நாட்டின் தலைமை போக்குவரத்து அதிகாரி அந் நாட்டு ஊடகங்களுக்கு

விபத்தில் உயிரிழந்தவர்களில் அதிகமானோர் கொலம்பியா நாட்டைச் சேர்ந்தவர்கள் மேலும் வெனிசுலா நாட்டைச் சேர்ந்தவர்களும் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

குறித்த பஸ்ஸோடு மோதுண்ட மற்றைய சிறிய வாகனத்தில் பயணித்த சிறுவர்களும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

விபத்தில படுகாயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளனர்” என கூறியுள்ளார்.

இந் நிலையில் விபத்து தொடர்பாக அப் பகுதி போக்குவரத்து பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடாத்தி வருகின்றனர்.

ஈக்வாடார் நாட்டில் கடந்த 3 நாட்களில் இடம்பெற்ற 2ஆவது பாரிய விபத்து இது என பொலிஸார் தெரவிக்கின்றனர்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை குவைட்டோ நகரின் தேசிய நெடுஞ்சாலையில் ஈக்வாடார் பார்சிலோனா கிளப் கால்பந்து விளையாட்டு ரசிகர்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில் 12 பேர் பலியானதோடு 30 பேர் படுகாயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.