அடக்க நினைத்தாலும் அடித்துக் காட்டினார் சந்திமால் ; இருபதுக்கு 20 தொடர் இலங்கை வசம்

Published By: Vishnu

14 Aug, 2018 | 10:23 PM
image

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி சந்திமாலின் துணையுடன் மூன்று விக்கெட்டுக்களினால் வெற்றியீட்டி ஒரேயொரு போட்டிய‍ை கொண்ட இருபதுக்கு 20 தொடரை கைப்பற்றியுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணியானது இலங்கையுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு இருபதுக்கு 20 போட்டி ஆகியவற்றில் விளையாடி வந்தது.

இதில் முதலாவதாக நடைபெற்று முடிந்த டெஸ்ட் போட்டித் தொடரினை இலங்கை அணி 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதன் பின்னர் நடைபெற்ற ஐந்து ஒருநாள் போட்டித் தொடரை தென்னாபிரிக்க அணி 3:2 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

அதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கிடையேயான இருபதுக்கு 20 போட்டி கொழும்பு, ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இரவு 7.00 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன் பிரகாரம் தென்னாபிரிக்க, இலங்க‍ை அணியின் பந்து வீச்சுக்களை எதிர்கொள்ள முடியாது 16.4 ஓவர்களிலேயே சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 98 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

தென்னாபிரிக்க அணி சார்பாக அணித் தலைவர் டீகொக் 20 ஓட்டங்களையும் ஹெண்ட்ரிக்ஸ் 19 ஓட்டங்களையும் கிளேசன் 18 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றுக் கொண்டனர்.

வெற்றியிலக்கு 99 தான் என்ற இலகுவாக எண்ணி களமிறங்கிய இலங்கை அணிக்கு முதல் ஓவரிலேயே ரபடா அதிர்ச்சி வைத்தியம் அளிதார். இதன்படி இலங்கை அணி நான்கு ஓட்டங்களை பெற்றிருந்தவேளை மூன்று ஓட்டங்களுடன் குசல் பெரேரா சம்ஸியிடம் பிடிகொடுத்து ஆட்டமிழக்க அடுத்து வந்த குசல் மெண்டீஸும் ரபடாவின் ஆறாவது பந்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதர்ச்சியை ஏற்படுத்தினார்.

அதன்படி இலங்கை அணி முதல் ஓவரில் இரண்டு விக்கெட்டுக்களை இழந்து 6 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தடுமாற ஆரம்பிக்க அடுத்தடுத்து களம்புகுந்த தினேஷ் சந்திமால் மற்றும் தனஞ்சய டிசில்வா அதிரடி ஆட்டத்துக்கு அஸ்திபாரம் இட்டனர்.

தனஞ்சய டிசில்வா நான்காவது ஓவரில் ஒரு 6 ஓட்டமும் 2 நான்கு ஓட்டங்களையும் விளாச மறுமுனையில் தினேஷ் சந்திமாலும் தனது பங்கிற்கு ஆறாவது ஓவரில் அடுத்தடுத்து ஒரு நான்கு ஓட்டத்தையும் ஒரு ஆறு ஒட்டத்தையும் பெற்றுக் கொடுக்க ஆட்டம் சூடு பிடிக்க ஆரம்பித்தது.

ஒரு கட்டத்தில் இலங்கை அணி 6.3 ஆவது ஓவருக்கு 50 ஓட்டங்களை கடந்தது. இதையடுத்து இவர்கள் இருவம் இணைந்து 40 பந்துகளுக்கு 50 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக் கொண்டனர். அதைத் தொடர்ந்து அதிரடியாக ஆடிய தனஞ்சய டிசில்வா 4 நான்கு ஓட்டங்களுடனும் 2 ஆறு ஓட்டங்கள் அடங்களாக 31 ஓட்டங்களை பெற்று ஜூனியர் டாலாவின் பந்தில் பெலக்கொய்யோவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய அணித் தலைவர் மெத்தியூஸும் எவ்வித ஓட்டங்களையும் பெறாது சம்ஸியின் பந்து வீச்சில் கிளேசனின் அற்புத பிடியெடுப்பு காரணமாக ஆட்மிழந்து வெளியேறினார். 

அடுத்து களமிறங்கி ஆடிவந்த தசூன் சானக்கவும் 11 ஆவது ஓவரில் சம்ஸியினுடைய பந்தில் அடுத்தடுத்து மூன்று நான்கு ஓட்டங்களை விளாசி 11.5 ஆவது ஓவரில் 16 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க திஸர பெரேராவுட் டக்கவுட் முறையில் சம்ஸியினுடைய பந்தில் போல்ட் ஆனார்.

எனினும் தன்னிலை மாறாது நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தினேஷ் சந்திமால் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இறுதியாக இலங்கை அணி 16 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து தென்னாபிரிக்க அணி நிர்ணயித்த 99 ஓட்டங்களை தொட்டது.

வெற்றிக்கு வழிவகுத்த தினேஷ் சந்திமல் 36 ஓட்டங்களுடனும் இசுறு உதான ஐந்து ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். 

பந்து வீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பில் ரபடா, சம்ஸி மற்றும் ஜூனியர் டலா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் டூமினி ஒரு விக்கெடடினையும் கைப்பற்றினர்.

அத்துடன் தென்னாபிரிக்க அணி இருபதுக்கு 20 ‍போட்டிகளில் பெற்றுக் கொண்ட குறைந்த ஓட்ட எண்ணிக்கை இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35