மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணிப் பிரதேசத்தில் நீண்டகாலமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்டுவந்த ஒருவரை நேற்று  மாலை பெலிஸார்  கைது செய்ததுள்ளனர்.

அத்துடன் 7 லீற்றர் கசிப்பு மற்றும் கசிப்பு தயாப்புக்கான 45 லீற்றர் கோடா மற்றும் உபகரணங்களையும் பொலிஸார் மீட்டகப்பட்டுள்ளர். 

பொலிஸ் விடே புலனாய்வு பிரிக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து மட்டு பொலிஸ் நிலைய ஊழல் தடுப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் எஸ்.பிரபாகரனின் வழிகாட்டலில், நேற்று மாலை குறித்த வீட்டை  சுற்றிவளைத்து தேடுதலில் ஈடுபட்ட போது மறைத்து வைக்கப்பட்டிருந்த 7 லீற்றர் கசிப்பு 45 லீற்றர் கோடா வடிப்பதற்கான உபகணங்கள் மீட்கப்பட்டதுடன் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்தனர் 

இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் மட்டு கருவப்பங்கேணி பகுதியில் நீண்டகாலமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்டுவந்துள்ளார் என பொலிஸாரின் ஆரம்பவிசாரணையில் தெரியவந்துள்ளதுடன் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்