எனது நண்பரும் பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் தலைவருமான இம்ரான்கான் பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் பெற்றோலிய வளத்துறை அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க.

பாகிஸ்தானின் சுதந்திர தினத்தை முன்னிட்ட நல்லெண்ண விஜமாக கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும் P.M.S.S. காஷ்மீர் கப்பலில் இன்று மாலை இடம்பெற்ற பாகிஸ்தானின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்பேதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்த நிகழ்வில் என்னை பிரதம அதிதியாக அழைத்தது எனக்கு ஆச்சரியத்தை தந்துள்ளது. பாகிஸ்தானின் முன்னள் கிரிக்கெட் அணியின் தலைவரும் எனது நண்பருமான  இம்ரான்கான் பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்பதை எண்ணி நான் பெருமை அடைவதுடன் அவருக்கு எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.