'Building, Owning and Belonging' எனும் தலைப்பில் உரிமையாளர் அடிப்படையிலான வீடுகள் ளக்கட்டமைப்பு தொடர்பில் புத்தகமொன்றை ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் UN- bitat இணைந்துளியிட்டுள்ளன. கடந்த மூன்று தசாப்த காலங்களில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் சிறந்த போன்றவற்றை உள்ளடக்கி இந்த புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இலங்கை தொடர்பில் இந்த புத்தகம் கவனம் செலுத்தியுள்ளதுடன் இந்தியா போன்ற நாடுகள் அடங்கலாக ,ஏனைய நாடுகளிலிருந்து பெறப்பட்ட நேர்வு பற்றி ஆய்வுகள் குறித்தும் கவனம் செலுத்தியுள்ளது.1980 ஆம் ஆண்டுகளில் மில்லியன் வீடுகள் திட்டத்தை அறிமுகம் செய்ததிலிருந்து, வீடுகள் வழங்குவது தொடர்பில் இலங்கை சர்வதேச மட்டத்தில் கௌரவிக்கப்பட்டுள்ளது. மக்களின் பங்களிப்புடன் பெறுமதி வாய்ந்த நிர்மாணங்களை மேற்கொள்வதில் இலங்கை கவனம் செலுத்தியிருந்தது. மேலும் உள்நாட்டவர்களுக்கு சகாயமான வகையில் நிதி உதவிகளையும் தொழில்நுட்ப உதவிகளையும் வழங்கி,நிர்மாண செயற்பாடுகளை முன்னெடுப்பதன் வினைத்திறனுக்கும் இது சிறந்த முன்னுதாரணமாக அமைந்துள்ளது.2007 ஆம் ஆண்டு முதல் இலங்கையின் உரிமையாளர் அடிப்படையிலான வீடுகள் மீள நிர்மாணத்தின் வெற்றிகரமான பங்களிப்பை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கி வருகிறது. மீளக்குடியேற்றப்படும் குடும்பங்களுக்காக 20000க்கும் அதிகமான வீடுகளை ஐரோப்பிய ஒன்றியம் நிர்மாணித்துள்ளதுடன், 2020 ஆம் ஆண்டுக்கு முன்னதாக மேலும் 2400 வீடுகள் நிர்மாணிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெவ்வேறு ஐரோப்பிய ஒன்றிய நன்கொடைகளின் பிரகாரம்ரூபவ் உரிமையாளர்அடிப்படையிலான வீடுகள் மீள் நிர்மாண செயற்பாடுகளுக்கு 65 மில்லியன் யூரோக்கள் வழங்கப்பட்டுள்ளன. பெண்களை தலைமையாகக் கொண்ட குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகளை கொண்ட குடும்பங்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் அடங்கலாக 40,000க்கும் அதிகமான மக்கள் நேரடியாக அனுகூலம் பெற்றுள்ளனர்.இந்த புத்தக வெளியீட்டு நிகழ்வில் கூட்டாண்மைக்கான தலைமை அதிகாரி லிபுசே சுகுபோவா கருத்துத்தெரிவிக்கையில்,  “சுமார் ஒரு தசாப்த காலப்பகுதிக்கு மேலாகரூபவ் ஐரோப்பிய ஒன்றியம் - இலங்கை கைகோர்ப்பு திட்டத்தினூடாக வீடமைப்பு நடவடிக்கைகளுக்கு உதவிகளை வழங்குவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாக அமைந்துள்ளது. இலகுவில் பாதிப்படையக்கூடிய மக்களின் தேவைகளுக்கு செவிமடுத்து, அவர்களின் வீட்டுத் தேவைகளை மட்டும் நிவர்த்தி அவர்களின் வாழ்க்கையை நிர்வகிப்பதற்கும் உதவிகளை வழங்குகிறது. வெவ்வேறு விதமான திறன் கட்டியெழுப்பல் மற்றும் பெண்களுக்கு உதவிகளை வழங்கல்போன்றவற்றை பின்தங்கிய சமூகங்களில் முன்னெடுக்கிறது. இலங்கையின் மக்களின் வாழ்க்கையைமீளக்கட்டியெழுப்புவதில் அர்த்தமுள்ள வகையில் பங்களிப்பு வழங்க முடிந்தமை தொடர்பில் நாம் பெரும் மகிழ்ச்சியடைகிறோம்.” என்றார்.
புத்தகத்தினூடாக உரிமையாளர் அடிப்படையிலான வீடமைப்பு திட்டத்தினூடாக மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்ற முடிந்துள்ளமை மற்றும் அதிகளவு பொருளாதார ரீதியில் சிக்கனமானதாகவும் அமைந்துள்ளமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. வீடமைப்பு திட்டத்தின் வெற்றிகரமான செயற்பாட்டில் மக்கள் அவற்றுக்கான பொறுப்பை வகிப்பதுடன், தமக்குரிய தெரிவுகளை மேற்கொள்வதுடன், ஒப்பந்தக்காரர்களுடன் விலை பேரம்பேசலில் ஈடுபடுகின்றனர். வீடமைப்பு திட்டங்களினூடாக, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் UN-Habitat ஆகியன இணைந்துஉரிமையாளரின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படும் வீடமைப்பு செயற்பாடுகள் பொது மக்களுக்கு பொருத்தமானதாக அமைந்துள்ளதுடன் ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை விட பொது மக்களின் எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்வதாக அமைந்திருக்கும். மேலும் ஐரோப்பியஒன்றியத்தின் உதவியுடன், எதிர்காலத்தில் மக்களின் நிதிசார் அறிவை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அளவுக்கதிகமான கடன்சுமையின்றி தமது வீடுகளை விஸ்தரித்துக் கொள்ளவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மூலப்பொருட்களை பயன்படுத்தி இந்த நிர்மாண செயற்பாடுகளை முன்னெடுக்க ஐரோப்பிய ஒன்றியம் ஊக்குவிப்புகளை வழங்குகிறது. உள்நாட்டு பொருளாதாரத்துக்கு இந்த மூலப்பொருட்கள் பங்களிப்பு வழங்குவதுடன், சூழலுக்கு பாதகமான தாக்கங்கள் ஏற்படுவதையும் தவிர்க்கிறது. Auroville Earth Instituteமற்றும் இதர நன்கொடை அமைப்புகளான உலக வங்கி, அவுஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து மற்றும் இந்தியா அரசாங்கங்கள் போன்றவற்றிடமிருந்து பெறப்பட்ட பெறுமதி வாய்ந்த தகவல்களைக் கொண்டு இந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியில் வெளியிடப்பட்டுள்ள புத்தகம்அமைந்துள்ளது. இந்த அனைத்து தரப்பினரும் சுமார் 100,000க்கும் அதிகமான உரிமையாளரின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்ட வீடுகள் புனர்நிர்மாண செயற்பாடுகளுக்கு முக்கிய பங்காற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.