திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கையை பிடித்து வேண்டுகோள் விடுத்தேன் என திமுகவின் செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று திமுகவின் செயற்குழு கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கருணாநிதி தனது அண்ணன் அண்ணாஅருகிலேயே தனது உடலை அடக்கம் செய்யவேண்டும் என விரும்பினார் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அது தான் அவருடைய ஆசை மருத்துவர்கள் கருணாநிதியின் உடல்நிலை மோசமாக உள்ளது என தெரிவித்ததும் நாங்கள் தமிழக அரசுடன் பேசினோம் ஆனால் அரசு மறுத்துவிட்டது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆனால் நான் மானம் போனால் கூட பரவாயில்லை என தமிழக முதல்வரை சந்திக்க சென்றேன் என தெரிவித்துள்ள ஸ்டாலின் கருணாநிதிக்காக யாரையும் சந்திக்க எதையும் இழக்க நான் தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வெட்கத்தை விட்டு சொல்கின்றேன் முதல்வரின் கையை பிடித்து கருணாநிதிக்கு இடம்கேட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளா.

நீதிமன்றத்தில் எங்களிற்கு  சாதகமாக தீர்ப்பு வந்திருக்காவிட்டால் மெரீனாவில் என்னை புதைக்கும் நிலை வந்திருக்கும் எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.