முல்லைத்தீவு, நாயாற்றுப் பகுதியில் நேற்றிரவு தமிழ் மீனவர்களின் படகுகள், வலைகள் மற்றும் வாடிகள் என்பன தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தன் பேரில் மூவரை கைதுசெய்துள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் தென்பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ள பொலிஸார் இவர்களிடம் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை இன்றையதினம் முல்லைத்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 27 மீனவர்களை கைதுசெய்துள்ள முல்லைத்தீவு பொலிஸார் இவர்கள் பயணித்த 8 படகுகளையும் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.