வீதி விளக்கு முகாமைத்துவம் தொடர்பான தேசிய திட்டமிடல், மின்சாரம், குடிநீர் மற்றும் பெற்றோலியம் ஆகிய துறைகளில் பாவனையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை தொடர்பாக பொது மக்களிடம் ஆலோசனை கேட்கும் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. 

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஏற்பாடு செய்திருந்த இக் கலந்துரையாடலானது அண்மையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் லோட்டஸ் கூடத்தில் நடைபெற்றது. 

 

இந் நிகழ்வில் மத்திய மாகாணத்தின் பாவணையாளர்கள், உற்பத்தியாளர்கள், துறைசார்ந்தவர்கள், அதிகாரிகள், குறித்த துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 400 க்கும் மேற்பட்ட பங்காளர்கள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.