தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலை கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டமை உட்பட பல சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த நேவி சம்பத் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இதனை தெரிவித்துள்ளனர்.

இலங்கை கடற்படையினை சேர்ந்த பிரசாத் சந்தன ஹெட்டியாராச்சி என அழைக்கப்படும் நேவி சம்பத் கைதுசெய்யப்பட்டுள்ளார் என குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.

ரவிராஜ் கொலை கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டமை உட்பட பல சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த நேவி சம்பத் தலைமறைவாகியிருந்ததை தொடர்ந்து நீதிமன்றம் அவரிற்கு எதிராக பிடியாணை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து நேவி சம்பத்தை கைதுசெய்வதற்காக பொதுமக்களின் உதவியை நாடிய குற்றப்புலனாய்வு பிரிவினர் அவரை சில தரப்புகள் மறைத்து வைத்துள்ளன எனவும் தெரிவித்திருந்தனர்.

அவரை மறைத்து வைத்துள்ளவர்களிற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.