கொட்டகலை டிரேட்டன் பகுதியில் 1 கிலோ 800 கிரேம் கேரள கஞ்சாவுடன் நான்கு பேர் நேற்று  இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சுற்றி வளைப்பினை மேற்கொண்ட போது குறித்த நபர்களால் இரகசியமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கேரள கஞ்சா விற்பனை மிகவும் இரகசியமான முறையில் நீண்ட காலமாக இடம்பெற்று வந்துள்ளதாக கலால் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதுடன், இதனுடன் தொடர்புடைய மேலும் சிலர் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் கொட்டகலை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்ளை இன்று ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக கலால் திணைக்கள அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.