கண்டி - ராகலை பிரதான வீதியின் கட்டுகஸ்ஹின்ன பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கர வண்டியொன்றும் கெப்ரக வாகனமொன்றும் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

மேற்படி விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக ரிகிலகஸ்கட வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்ட நிலையில் இவர்களுள் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.