பங்களாதேஷில் பாலியல் துஸ்பிரயோக வழக்கில் தொடர்புடைய ஐவருக்கு தூக்கு தண்டனை

Published By: Digital Desk 4

14 Aug, 2018 | 11:40 AM
image

பங்களாதேஷில் இடம்பெற்ற விடுதலை போரின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டதுடன் 17 கொலைகள் மற்றும் 15 பெண்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்த வழக்கில் 5 பேருக்கு இன்று தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

பங்களாதேஷில் 1971 ஆம் ஆண்டு, பாகிஸ்தானுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சுதந்திரப் போராட்டத்தின்போது ஒரு தரப்பினர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டதுடன், கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட போர்க்குற்றங்களிலும் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

இதைத்தொடர்ந்து, 2010 ஆம் ஆண்டு போர்குற்ற வழக்குகளை விசாரிக்க சர்வதேச குற்றத்தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இங்கு நடைபெற்றுவரும் வழக்குகளின் விசாரணையில், பலருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

விடுதலை போரின்போது பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி அயூப் கானுக்கு ஆதரவாக செயல்பட்டதுடன் பங்களாதேஷின் பட்டுவாகாலி மாவட்டத்துக்கு உட்பட்ட இட்டாபாரியா கிராமத்துக்குள் புகுந்து 17 பேரை கொன்றதாக  (முன்னாள்) பழமை வாத முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த 5 பேர் கடந்த 2015 ஆம் ஆண்டில் கைது  செய்யப்பட்டனர். 

மேலும், அதே கிராமத்தில் 15 பெண்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்து பொது சொத்துகளை சேதப்படுத்தியது. வீடுகளை எரித்தது, ஆள்கடத்தல், சித்ரவதை செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்கள் பங்களாதேஷ் நீதிமன்றத்தில் இவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் 5 பேருக்கும் முன்னர் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து மூன்று நீதிபதிகளை கொண்ட சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் அவர்கள் மேல்முறையீடு செய்தனர். 

இந்நிலையில் இன்று இவ்வழக்கில் தீர்ப்பளித்த தீர்ப்பாயம், ‘போர்குற்றத்தின் ஒரு பகுதியாக இவர்கள் 5 பேரும் பெண்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளனர். அவர்களுக்கு நாம் அளிக்க வேண்டிய அங்கீகரமாக இத்தகைய குற்றம் செய்தவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்தே ஆக வேண்டும்.

எனவே குற்றவாளிகள் முஹம்மது இஷாக் ஷிக்தர், அப்துல் கனி, முஹம்மது அவால், சத்தார் படா, சுலைமான் மிருதா ஆகியோரை சாகும்வரை தூக்கிலிட்டு கொல்லுமாறு உத்தரவிடுகிறோம்’ என தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17