அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் அபூர்வமான விடயம் ஒன்று நடந்தேறியுள்ளது.  

அங்கு, உள்ள தோல் நோய் ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிபவர் 62 வயதுடைய  ராபர்ட் டைசன். இவருக்கும் மேலாண்மை அதிகாரியாக பணிபுரிந்து வரும் 37 வயது பெண்ணுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதனால், குறித்த பெண் ஊழியர் மீது கோபத்தில் இருந்த ராபர்ட், அவர் பானம் பருகும் கிண்ணத்தில் தனது விந்தினை கலந்து வைத்துள்ளார்.

அதன் பின்னர், தனது கிண்ணத்தில் பானம் பருகும் போது ஏதோ ஒரு வாடை வருவதை அறிந்த பெண் ஊழியர், அதில் ஏதோ கலக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்தார்.

அதனைத் தொடர்ந்து, தான் அறையை விட்டு வெளியேறி திரும்பிய இடைவெளியில் தான் யாரோ தன் அறைக்குள் நுழைந்துள்ளனர் எனும் சந்தேகம் அவருக்கு எழுந்துள்ளது.

பின்னர், சிசிடிவி கமிராவை அவர் ஆராய்ந்ததில் ராபர்ட் ஏதோ ஒரு பொருளை, சிறு போத்தலில் இருந்து கொண்டு வந்து தனது கிண்ணத்தில் கலப்பது தெரிய வந்துள்ளது.

அதன் பின்னர், ராபார்ட்டை விசாரித்ததில் தனது விந்தணுவை அவர் கலந்ததை ஒப்புக் கொண்டார். இதனால் அவர் வேலையை விட்டு நீக்கப்பட்டார்.

மேலும், ராபர்ட் மீது நீதிமன்றத்தில் அப்பெண் வழக்கும் தொடர்ந்துள்ளமையும் குறிப்பிடதக்கது.