தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒரேயொரு இருபதுக்கு 20 போட்டி இன்று கொழும்பு, ஆர். பிரேமதாஸ விளையாட்டரங்களில் இரவு 7.00 மணிக்கு ஆரம்பகமாவுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணியானது இலங்கையுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு இருபதுக்கு 20 போட்டி ஆகியவற்றில் விளையாடி வருகிறது.

இதில் முதலாவதாக நடைபெற்று முடிந்த டெஸ்ட் போட்டித் தொடரினை இலங்கை அணி 2:0 என்ற கணக்கில் அபாரமாக வெற்றியீட்டி தொடரை கைப்பற்றியது. இதன் பின்னர் நடைபெற்ற ஐந்து ஒருநாள் போட்டித் தொடரை தென்னாபிரிக்க அணி 3:2 என்ற கணக்கில் வெற்றியீட்டி தொடரை கைப்பற்றியுள்ளது.

இந் நிலையில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு தொடரினை கைப்பற்றி சமநிலையில் இருக்க இன்று இடம்பெறப்போகும் மூன்வாதும் இறுதியுமான ஒரேயொரு பேட்டி கொண்ட இருபதுக்கு 20 தொடரை யார் கைப்பற்றுவாரகள் என்பது இன்றிரவு தெரியவரும்.

இதன்படி தென்னாபிரிக்க அணியுடன் இருபதுக்கு 20 தொடரில் களமிறங்கவுள்ள மெத்தியூஸ் தலைமையிலான இலங்கை அணியினை இலங்கை கிரக்கெட் தெரிவுக்குழுவானது கடந்த வாரம் அறிவித்தது.

இதற்கிணங்க இலங்கை அணியில் அஞ்சேலா மெத்தியூஸ், தசூன் சானக்க, குசல் ஜனித் பெரேரா, தனஞ்சய டிசில்வா, உபுல் தரங்க, குசல் மெண்டீஸ், திஸர பெரேரா, ஷெஹான் ஜயசூரிய, மதுசங்க, லஹிரு குமார, தினேஷ் சந்திமால், அகில தனஞ்சய, ஜெப்ரி வெண்டர்சே, சந்தகான் மற்றும் பினுர பெர்னாண்டோ ஆகிய 15 பேர் உள்ளடக்கப்பட்டிருந்தனர்.

எனினும் இலங்கை கிரிக்கெட் குழு நேற்று வெளியிட்ட தகவலுக்கிணங்க ஜெப்ரி வெண்டர்சே மற்றும் மதுசங்க ஆகியோர் இந்த குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களுக்கு பதிலாக கசூன் ராஜித மற்றும் இசுறு ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.