இரத்தினபுரி, மாரப்பன பகுதியில இரத்தினக்கற்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த ஒருவரை  இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் இந்த துப்பாக்கி பிரயோகம் சம்பவம் காரணமாக எவருக்கும் காயம்  ஏதும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்துள்ள பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.