எம்பிலிபிடிய பகுதியில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில், உயிரிழந்த இளம் குடும்பஸ்தரின் சடலத்தை எதிர்வரும் 10ம் திகதி தோண்டி எடுக்க எம்பிலிபிடிய நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி, உயிரிழந்தவரின் சடலத்தை தோண்டி எடுத்து மீளவும் பரிசோதனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்த போதே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.