Facial Palsy என்ற பாதிப்பிற்குரிய சிகிச்சை

Published By: Digital Desk 4

13 Aug, 2018 | 08:04 PM
image

ஐம்பது வயதைக் கடந்த சிலருக்கு இரவில் உறங்கி காலையில் படுக்கையிலிருந்து எழும் போது வாயை திறந்து பேச முடியாமலும், உதவிக்கு அழைக்கும் போது பேச்சு முழுமையாக இல்லாமல் குழறியபடியும் இருக்கும். 

உடனே குடும்ப உறுப்பினர்கள் அவருக்கு பக்கவாத பாதிப்பு ஏற்பட்டுவிட்டதோ என்று அஞ்சி பதற்றமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அழைத்து செல்வார்கள்.

அங்கு, அவர்களுக்கு உடனடியாக இரத்த பரிசோதனை, இரத்த சர்க்கரை பரிசோதனை, இ எம் ஜி எனப்படும் பரிசோதனை, அவசியப்பட்டால் அல்லது பாதிப்பினை உறுதிச் செய்து கொள்வதற்காக மூளை பகுதிக்கான எம் ஆர் ஐ ஸ்கேன் பரிசோதனை போன்ற பரிசோதனைகளை மேற்கொள்வார்கள்.

இதன் மூலம் Facial Palsy என்ற பாதிப்பிற்கான காரணத்தை துல்லியமாக வைத்தியர்கள் கண்டறிவார்கள். 

இது உயர் இரத்த அழுத்தத்தின் காரணமாக மூளையில் ஏற்பட்ட பாதிப்பின் விளைவா? அல்லது வைரஸ் கிருமிகளால் முகத்தில் உள்ள நரம்புகளின் செயல்பாடு பாதிக்கப்பட்டதால் ஏற்பட்ட விளைவா? என்பதை தெரிந்து கொண்டு அதற்குரிய சிகிச்சையை வழங்குவார்கள். பெரும்பாலானவர்களுக்கு Facial Palsy என்ற பாதிப்பிற்கும், பக்கவாதத்தால் ஏற்படும் Facial Palsy என்ற பாதிப்பிற்கும் வித்தியாசம் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்வதில்லை. 

அதனால் இத்தகைய பரிசோதனைகளின் மூலம் அந்த பாதிப்பை மருத்துவர்கள் உறுதி செய்து கொள்வார்கள்.

சளி தொந்தரவு அதிலும் மார்புச் சளி தொந்தரவு அதிகமுள்ளவர்கள் இத்தகைய Facial Palsy பாதிப்பிற்கு ஆளாகிறார்கள். இத்தகைய பாதிப்பிற்கு ஆளாகுபவர்களுக்கு  இயன்முறை மருத்துவ சிகிச்சை, மருந்து, மாத்திரை, ஊசி ஆகியவற்றின் மூலம் சிகிச்சையளித்து குணப்படுத்த இயலும். 

இத்தகைய பாதிப்பு குணமடைவதற்கு சிலருக்கு ஆறு மாத கால அவகாசம் கூட ஆகலாம். அதே போல் நோயாளிக்கு இது பக்கவாதம் அல்ல என்பதை எடுத்துரைப்பார்கள். அதே தருணத்தில் அவருடைய உடலில் இருக்கும் துணை கோளாறுகளான உயர் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயினை முழுவதுமாக கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு இதற்கு சிகிச்சை பெற்றால் இந்த பாதிப்பு குணமடையும் வாய்ப்பு அதிகம்.

டொக்டர் சைமன்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04