(இரோஷா வேலு) 

வாழைத்தோட்ட பகுதியில் நீண்ட நாட்களாக ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த ஒருவரை கைதுசெய்துள்ளதாக வாழைத்தோட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர் மீது ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரம் தொடர்பில் பல்வேறு வழக்குகள் காணப்படுவதாக தெரிவிக்கும் பொலிஸார், கடந்த 2017 ஆம் ஆண்டு இவர் மீது தொடரப்பட்ட போதைப்பொருள் விநியோகம் தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இவரை கைதுசெய்துள்ளனர்.

அத்துடன் இவரிடமிருந்து 3 கிராம் 150 மில்லிகிராம் ஹெரோயின்  போதைப் பொருளையும் கைப்பற்றியுள்ள வாழைத் தோட்டம் பொலிஸார் இவரை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது நீதிவான் அவரை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.