வெலிக்கடை சிறைச்சாலையின் கூரை மேல் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த பெண் சிறைக்கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக நான்கு பேர் காயமடைந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு காயமடைந்த நான்கு பெண் சிறைக் கைதிகளையும் சிகிச்சைக்காக கொழும்பு, தேசிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.