பேராதனைப் பல்கலைக் கழக கலை பீட மாணவர்கள் சுமார் ஆயிரம் பேர்  இன்று எதிர்ப்பு ஆர்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

கலைப்பீட விசேட பாட நெறிகளுக்கு தெரிவு செய்யப்படும் மாணவர் தொகையை எல்லைப் படுத்தியுள்ளதுடன் பாடநெறியின் தரத்தை பேணுதல் என்ற ரீதியில் ஆங்கிலம், தகவல் தொழில் நுட்பம் போன்ற துறைகள் திணிக்கப்பட்டு அதனை ஒரு காரணமாக வைத்து சிலர் பாட நெறியிலிருந்து வெளியேற்றப்பட்டு வருவதாகவும் மாணவர் சங்கத் தலைவர் ஜே.பிரசன்ன சம்பத் தெரிவித்தார்.

பல்கலைக் கழகக் கல்விக்கு இவ்வாறு பல்வேறு நிபந்தனைகளை உட்படுத்தி தனியார் கல்வித்துறையை வளர்ப்பதாகவும் குற்றம் சாட்டினர். 

இது விடயமாக நிர்வாகத்துடன் நடத்திய பேச்சு வார்த்தைகள் வெற்றியளிக்க வில்லை எனவும் தெரிவித்து அவர்கள் கலைப்பீட வளாகத்தில்  சுமார் ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.