சோட்டோக்கான் கராத்தே அக்கடமி இன்டநசனல் ஸ்ரீலங்காவின் பிரதம பயிற்றுனரும் கராத்தே ஒப் ஜப்பான் பெடரெசன் இன்ரநசனல் அமைப்பின் வெளிநாட்டு விவகார பணிப்பாளருமான சிகான்.அன்ரோ டினேஸினால் அண்மையில் சென்னையில் நடாத்தப்பட்ட கராத்தே தேர்வில் கராத்தே பயிற்றுனர் சென்செய்.ஆர்.பாலசிறிகரன் ஸ்டிபன் 4 ஆம் கறுப்புப்பட்டி டிப்ளோமா தரத்தில் சித்தியடைந்துள்ளார். 

மேலும் சென்செய். பாலசிறிகரன் கராத்தே ஒவ் ஜப்பான் பெடரெசன் இன்ரநசனல் இந்திய அமைப்பின் பிரதிநிதி சிகான்.ஏ.நைசாமினால் மேற்படி அமைப்பின் சென்னை மாநகருக்கான பிரதம பயிற்றுனர் ஆகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

அன்ரோ டினேஸ் கராத்தே ஒவ் ஜப்பான் பெடரெசன் இன்ரநசனல், இலங்கை தேசிய கராத்தே தோ சம்மேளனம் மற்றும் உலக கராத்தே சம்மேளனம் WKF, ஆகிய அமைப்புகளின் 6ஆம் கறுப்புப்பட்டி தரத்தை பெற்றவர் என்பதோடு அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் உள்ள KOJF International, மற்றும் USK கராத்தே அமைப்புகளினால் சிகான் நாமம் வழங்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் சோட்டோக்கான் கராத்தே அக்கடமி இன்ரநசனல் ஸ்ரீலங்கா அமைப்பானது இலங்கை தேசிய கராத்தே சம்மேளனம், இலங்கை பாடசாலைகள் கராத்தே சங்கம், அமெரிக்காவின் கராத்தே ஒவ் ஜப்பான் பெடரெசன் இன்ரநசனல் மற்றும் ஜப்பானின் யுனிவேர்சல் சோட்டோக்கான் கராத்தே தலைமையகம் ஆகியவற்றின் உறுப்புரிமை மற்றும் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.