(எம்.எம்.மின்ஹாஜ்)

எமக்கென்று அரசாங்கம் ஒன்று அவசியம் என்பதனால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்த வேண்டியது அவசியமாகும் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

கண்டியில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் அடுத்த ஜனவரிக்கு பின்னர் ஜனாதிபதி தேர்தலுக்கு செல்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அதிகாரம் உண்டு. 

ஆகவே மாகாண சபை தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் வருவதற்கான சாத்தியம் உள்ளது. இதன்படி ஜனாதிபதி தேர்தலுக்கும் நாம் தயாராக வேண்டியுள்ளது. அதற்காக ஏற்பாடுகளை கிராம மட்டத்திலிருந்து தற்போதே முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.