(இராஜதுரை ஹஷான்)

அரசாங்கம் வீண்செலவுகளை  செய்வதால் தான் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியினர் தெரிவிக்கும் குற்றச்சாட்டானது உண்மைக்கு புறம்பானதாகும் என பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கூட்டரசாங்கத்தின் இரண்டு  தலைவர்களும்  செலவீனங்களை குறைத்தே நிர்வாகத்தை முன்னெடுக்கின்றனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு குடும்பத்தை நிர்வகிக்கும் தலைவரை போன்றே நாட்டின் நிர்வாகத்தை மேற்கொள்கின்றார். 

குறிப்பாக ஜனாதிபதி வெளிநாட்டு உத்தியோகபூர்வ அரச பிரயாணங்களின் போது பிரத்தியேகமான விமானங்களில் பயணிப்பதில்லை. பொதுமக்கள் பயன்படுத்தும் விமானங்களில்   மக்களோடு மக்களாக பயணிக்கின்றார்.

இவ்வாறு கடந்த மூன்று   வருட காலமாக அரசாங்கம் எவ்விதமான விளம்பரங்களும்   இன்றி மக்களுக்கு பாரிய அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டுள்ளது என்பதை மக்கள் விடுதலை முன்னணியினர் கவனத்திற் கொள்ள வேண்டும் என்றார்.