501 அறைகளைக் கொண்ட நாட்டின் மாபெரும் சகல அம்சங்களையும் கொண்ட நட்சத்திர ஹோட்டலான Riu ஸ்ரீ லங்கா, மர நடுகை மற்றும் கடற்கரை தூய்மையாக்கல் நிகழ்ச்சியை அண்மையில் முன்னெடுத்திருந்தது. 

தனது சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகளின் அங்கமாக இந்த செயற்பாடுகளை ஹோட்டல் முன்னெடுத்திருந்தது. எதிர்காலத்திலும் இது போன்ற  செயற்பாடுகளில் தன்னை டுபடுத்த சுரை ஹோட்டல் திட்டமிட்டுள்ளது.

சூழல் மாசடைதல் என்பது உலகளாவிய ரீதியில் காணப்படும் பாரிய பிரச்சினைகளில் ஒன்றாக அமைந்துள்ளது. உலகளாவிய ரீதியில் சூழல் மாசடைதல் என்பது துரிதமாகவும் பரந்தளவிலும் இடம்பெறுகிறது. இந்த சூழல் மாசடைதலிலிருந்து சூழலை காப்பதற்காக நிறுவனங்கள், தனிநபர்கள் தமது காலத்தையும், செல்வங்களையும் ஒதுக்கி முன்வருவது வரவேற்கத்தக்க விடயமாகும்.

தூய்மையான மற்றும் பசுமையான சூழலுக்கு பங்களிப்பு வழங்கும் வகையில் Riu ஸ்ரீ லங்கா, நீர் மற்றும் வளி மாசு தொடர்பான இரு பாரிய சவால்களில் தனது கவனத்தை செலுத்தியிருந்தது. உள்நாட்டு சமூகத்துக்கு மீள வழங்குவது என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளது. 

அரசாங்க அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் உள்நாட்டவர்களின் பங்களிப்புடன் கடற்கரையில் பெருமளவு இளநீர் மரங்களை பயிர் செய்திருந்தது. மரங்களை நடுவதனூடாக வளி மாசடைவதை குறைக்க முடியும் என்பதுடன் காபன் வெளியீட்டை குறைத்து பறவைகள் மற்றும் இதர வனஜீவராசிகளுக்கு உறைவிடத்தை வழங்க முடியும்.

தனது ஊழியர்களுடன் ஒரு நாள் பொழுதை ஹோட்டல் அண்மையில் செலவிட்டு, கடற்கரையை தூய்மையாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது. இதன் போது கடற்கரை பகுதியில் காணப்பட்ட பெருமளவு உணவுக்கழிவுகள் மற்றும் பானங்கள் போத்தல்கள் போன்றவற்றை அகற்றியிருந்தது. இந்த செயற்பாட்டில் பெருமளவு விருந்தினர்களும் தன்னார்வ அடிப்படையில் முன்வந்து பங்களிப்பு வழங்கியிருந்தனர். பெருமளவு பிளாஸ்ரிக் கழிவுகள் உலகின் கடலில் கலக்கின்றன. இவை கடல் வாழ் உயிரினங்களுக்கு பாரிய இடராக அமைந்துள்ளது. Riu ஸ்ரீ லங்கா இந்த செயற்பாட்டினூடாக சுமார் 126 கிலோகிராம் கழிவை சேகரித்திருந்தது. இதில் பிளாஸ்ரிக் எடை சுமார் 30 கிலோகிராம்களுக்கு அதிகமாக காணப்பட்டது.

இலங்கையின் முதலாவது சகல அம்சங்களையும் கொண்ட மற்றும் 501 அறைகளை கொண்ட பாரிய ஹோட்டல் எனும் வகையில், ஐந்து நட்சத்திர சுரை ஸ்ரீ லங்கா, குடும்ப விடுமுறைக்கு மிகவும் சிறந்த தெரிவாக அமைந்துள்ளதுடன்ரூபவ் மனம் மறவாத தேனிலவு அல்லது நண்பர்களுடன் விடுமுறையை செலவிட பொருத்தமானதாகவும் அமைந்துள்ளது. 

உள்நாட்டவர்களுக்கு அனுபவத்தை பெற்றுக் கொள்ளக்கூடிய சிறந்த காலப்பகுதியாக தற்போதைய காலப்பகுதி அமைந்துள்ளதுடன்ரூபவ் ஹோட்டல் 30 சதவீதம் வரை விலைக்கழிவை வழங்குவதுடன், 5 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இலவசமாக தங்க முடியும். 6 முதல் 12 வயது வரையான சிறுவர்களுக்கு 25 சதவீத கட்டணத்தை மட்டுமே செலுத்த வேண்டும்.