லிட்ரோ காஸ் முன்னெடுத்திருந்த ‘Live Cook-off’

Published By: Priyatharshan

03 Mar, 2016 | 04:53 PM
image

மாபெரும் தேசிய திரவ பெற்றோலிய வாயு இறக்குமதியாளரான லிட்ரோ காஸ், ‘Live Cooking Competition’ எனும் போட்டியை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. 

அதிகளவு மகிழ்ச்சி, களிப்பு நிறைந்த சமையல் கலை போட்டியில் இலங்கையின் Miss Tourism Sri Lanka International அழகுராணி போட்டியில் பங்குபற்றிய 20 போட்டியாளர்கள் பங்கேற்றிருந்தனர். 

இலங்கை சமையல்கலை நிபுணர்களின் சம்மேளனத்துடன் இணைந்து இந்த போட்டி முன்னெடுக்கப்பட்டிருந்தது.

பெப்ரவரி 15 ஆம் திகதி கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற இந்த போட்டியில், நாட்டின் அதிகளவு அனுபவம் வாய்ந்த சமையல் கலை நிபுணர்கள் பலர் பங்கேற்றிருந்தனர். 

இந்த அழகுராணிகள் ஐந்து அணிகளில் A, B, C, D மட்தட்மற்றும் E என பிரிக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு உணவுக்கு முன்னரான சிற்றுணவு மற்றும் பிரதான உணவு ஆகியவற்றை தயாரித்துக் கொள்வதற்கு போதியளவு சேர்மானங்கள் வழங்கப்பட்டிருந்தன. 

இந்த சமையல்கலை செயற்பாட்டுக்கான தீச்சுவாலையை லிட்ரோ வழங்கியிருந்தது. சிறந்த சமையல்கலை நிபுணர்களுக்கு சிறந்த எரிபொருள் அவசியமாகும்.

Team C அணியில் மிஸ் லக்சம்பேர்க், மிஸ் மலேசியா, மிஸ் நெதர்லாந்து மற்றும் மிஸ் பிலிப்பின்ஸ் ஆகியோர் உள்ளடங்கியிருந்தனர். இந்த அணி வெற்றியாளராக தெரிவாகியிருந்தது. இவர்களின் சுவை நிறைந்த ஸ்பைஸி சிக்கன் என்பது அதிகளவானோரின் தெரிவாக அமைந்திருந்ததுடன், பஸ்டா மற்றும் சலாட் வகைகளும் கவனத்தை ஈர்த்திருந்தன. 

அவுஸ்திரேலியா, பெல்ஜியம், சீனா, டென்மார்க், இந்தியா, இத்தாலி, ஜப்பான், லிதுவேனியா, லக்சம்பேர்க், மலேசியா, நெதர்லாந்து, பிலிப்பின்ஸ், போலந்து, ரஷ்ய குடியரசு, சிங்கப்பூர், இலங்கை, சுவீடன், தாய்லாந்து, பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அழகிகள் சமையல் செயற்பாட்டை மட்டும் முன்னெடுக்காமல், இந்த செயற்பாட்டை முன்னெடுக்கும் போது பாடல் மற்றும் ஆடல் செயற்பாடுகளையும் முன்னெடுத்திருந்தனர்.

லிட்ரோ காஸ் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் சமிந்த எதிரிவிக்ரம கருத்து தெரிவிக்கையில், 

“வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த அழகுராணிகளுக்காக சமையல்கலை போட்டி ஒன்றை ஏற்பாடு செய்தமைக்காக நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். மகிழ்ச்சி, களிப்பு மற்றும் ஈடுபாடு ஆகியன சிறப்பாக அமைந்திருந்ததுடன், பங்குபற்றிய அனைவரின் முகங்களிலும் புன்முறுவலை ஏற்படுத்தியிருந்தது. லிட்ரோ உடன் சமையல் செயற்பாட்டை முன்னெடுத்திருந்தமையானது மறக்க முடியாத அனுபவமாக அமைந்திருந்தது” என்றார்.

மிஸ் பிரித்தானியாவான லோரா ஜேன் கிரெகரி கருத்து தெரிவிக்கையில், 

“நான்கு பேரைக் கொண்ட அணிகளில் நாம் போட்டியிட்டிருந்தோம். அனைவருக்கும் ஒரே மாதிரியான சேர்மானங்கள் வழங்கப்பட்டிருந்தன. எவ்வாறான உணவுகளை தயாரிக்க முடியும் என்பதை பற்றி நாம் யோசித்தோம். 

ஒவ்வொரு அணியும் வெவ்வேறு வகையான உணவை தயாரிக்க ஆரம்பித்தது. ஒவ்வொருவருடனும் கலந்துரையாடி திட்டமிடுவதற்கு சிறிது காலம் சென்றது. எமக்கு வழங்கப்பட்டிருந்த ஒவ்வொரு சேர்மானமும் மிகவும் சவால் நிறைந்ததாக அமைந்திருந்தது. 

ஏனெனில், நாம் உணவுக்கு முன்னரான ஆரம்பசிற்றுணவையும், பிரதான உணவையும் மட்டுமே தயாரித்திருந்தோம். அணியாக நாம் இந்த உணவு தயாரிப்பின் போதுஅதிகளவு மகிழ்ச்சியை அனுபவித்தோம். ஒருவரை ஒருவர் நன்றாக அறிந்து கொள்ள முடிந்தது” என்றார்.

மிஸ் லிதுவேனியா என்ரிகா ட்ரெப்குடே ஸிலின்ஸ்கீன் கருத்து தெரிவிக்கையில், 

“நாம் நன்றாக மகிழ்ச்சியடைந்திருந்ததுடன், வெவ்வேறு நாடுகளிலிருந்து நாம் பங்கேற்ற போதிலும், சிறந்த நண்பர்களானோம். சமையல் தொடர்பில் நாம் அதிகளவு மகிழ்ச்சியடைந்திருந்தோம்” என்றார். 

Ms Tourism Sri Lanka International பட்டத்தை வென்ற மிஸ் நெதர்லாந்து வெற்றியீட்டியிருந்ததுடன், இரண்டாம் மற்றும் மூன்றாமிடங்களை முறையே மிஸ் மலேசியா மற்றும் மிஸ் லிதுவேனியா ஆகியோர் பெற்றுக் கொண்டனர். சிறந்த தேசிய ஆடைக்கான தெரிவு மிஸ் ஸ்ரீ லங்காவுக்கு வழங்கப்பட்டிருந்தது.

இலங்கையில் திரவ பெற்றோலிய வாயு விற்பனையிலும் சந்தைப்படுத்தலிலும் சந்தை முன்னோடியாக லிட்ரோ காஸ் லங்கா லிமிட்டெட் (LGLL) செயற்படுகிறது. இணை நிறுவனமான லிட்ரோ காஸ் டேர்மினல் லங்கா பிரைவட் லிமிட்டெட் உடன் இணைந்து தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. லிட்ரோ காஸ் வர்த்தக நாமத்தின உரிமையாண்மையை நிறுவனம் தன்னகத்தே கொண்டுள்ளதுடன், நாடு முழுவதையும் சேர்ந்த தனது 5000 விற்பனை மையங்களின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்கி வருகிறது. 

பாதுகாப்பு நியமங்களைக் கடுமையாக பேணுவதற்காக லிட்ரோ காஸ் நன்மதிப்பைக் கொண்டுள்ளது. கம்பனியின் கொள்கையில் இது மிகவும் முக்கியத ;துவம் வாய்ந்த அங்கமாக கருதப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58